Sunday, February 21, 2010

' அன்பு தாயே '

"உன் இமைக்கும் பாதத்துக்கும்
உள்ள பிடிப்பு
உன் ஆத்மாவே .

ஆத்மாவிற்கு உருகொடுத்த
வானுக்கும் மண்ணுக்கும்
உள்ள தொடர்பு மழையே .

மழையில் கலக்கும் கநீற்போல்
கரைந்த என் துன்பங்களின்
முற்றுபுள்ளி ஆனது நீயே .



நீ அவிடம் ,நான் இவிடம்
உன்னுடன் சென்ற நாட்கள் ஏவிடம்
அவ்விடம் -நீ அறிந்த என் இதயமே .

இதயம் விழுந்த அந்த
அன்பின் இன்பகடலாகிய உன்னில்
சரணடைந்தேன் என்னையே .

என் ஆத்மாவில் கலந்த
உன் நினைவுகள்
என்னை விட்டு மறைவதிலயே .

மறையும் இந்த இரவு ,
விடியும் ஒரு காலை ,
மாற்றம் தான் பிரபஞ்சத்தின் நிரந்தரமே .



நிரந்தரம் இல்லா வாழ்வில்
நிரந்தர அன்பு மழர்களின் நறுமணத்தில்
என்னை தழைக்க வைத்த உயிர் நீயே. . .
. . . . . . அன்பு தாயே .

- சத்யா .

1 comment:

  1. மழர்களின் - Spell check :) Sooper post broo :)

    both of ur latest post has t same content with diff words :) wahhhhhw thats frequency :)

    ReplyDelete