" ஒரு நொடி
உன் சோகம் . .
ஒரு நிமிடம்
உன் கண்ணீர் . .
ஒரு மணி
உன் கசப்பு . .
ஒரு நாழிகை
உன் கசிவு . .
ஒரு நாள்
உன் ஏக்கம் . .
ஒரு வாரம்
உன் உருக்கம் . .
ஒரு வாழ்கை . .ஒரு ஜென்மம்
தொடராது இந்த கதறல்
விடியும்
ஒரு சூரியன்
அறிவாய்
நீ பிறந்த இன்பத்தை . .
ஒரு பொழுது
மறையும்
அறிவாய்
துக்கம் யாவும் தொடர்கதை அல்ல . .
இந்த வினாடி ,
மறைப்பாய் சோகத்தை . .
சிரிப்பாய் நிரந்தர
ஆனந்தத்தை . .
சிரிப்பாய் நிரந்தர
ஆனந்தத்தை. .":-)
-சத்யா .
No comments:
Post a Comment