Sunday, July 26, 2009
கனவே . .
"நெஞ்சில் ஊரும் ஊற்றே . .
அறிவில் சிருற்றும் ,பொங்கி தெளிக்கும் கடலே . .
என்னுடன் பயணிக்கும் ,என்
தீராத ஆசைகளை நிறைவேற்றும் மகானே . .
இவ்வளவு தான் என்று நினைதேன் ,
நீ எவ்வளவோ இவ்வளவுகளை அள்ளி தெளித்தாய் . .
உலகம் சிறிதாயினும் ,உலகிற்கு
அப்பாற்பட்ட எந்திரம் நீ. .
நான் அறியாத ,இயலாத சுசமங்களை
வெளிச்சமாகினாய் நீ உன் உலகில் . .
என் இறந்தகாலம் ,நிகழ்காலம் ,எதிர்காலத்தின்
காட்சி ஒப்பனையாளர் நீ. .
நான் இங்கே,என் ஜீவனும் இங்கே,
இருந்தும் என்னை எங்கோ எங்கெங்கோ ,
உலகின் எட்டுத்திசையும் ,இமாலய மழையின் உச்சியும் ,
என் அபிமான உள்ளங்களிலும் பயணிக்க வைத்தாய் . .
என் மனம் அலைபாயும் திக்கில் ,
என் எக்கங்களின் உட்சியையும் பார்க்க வைத்தாய் . .
என்னால் முடியாத அத்துனையும் ,நீ
செயலாற்றி சாதிக்க வைத்தாய் - என் 'கனவே' ! " <3
-சத்யா .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment